நாட்டில் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலைமையில், உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் மற்றும் தேனீர் என்பவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன.
இவ்வாறான நிலையில், தேனீரை 5 ரூபாவுக்கும் அப்பத்தை 10 ரூபாவுக்கும் உளுந்து வடையை 10 ரூபாவுக்கு விற்பனை செய்யும் சிறிய உணவகம் ஒன்று அனுராதபுரம் பதவிய பிரதேசத்தில் இயங்கி வருகிறது. பதவிய வைத்தியசாலைக்கு அருகில் இந்த உணவகம் இயங்கி வருகிறது.
குறைந்த விலையில் உணவுகளை விற்பனை செய்வதால், வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளின் பெரும்பாலானவர்களின் வரவேற்பை பெற்று இந்த உணவகம் இயங்கி வருகிறது. ஷாந்த தேனீர் கடை என்பது இந்த உணவகத்தின் பெயர்.
25 வருடங்களுக்கு மேலாக ஷாந்த என அழைக்கப்படும் காமினி சரத் குமார என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் இந்த உணவகம், அனைத்து உணவுகளும் தீர்ந்த பின்னர் இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.
பருப்பு மற்றும் உளுந்து வடை 10 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்டிஸ் , ரோல்ஸ் 30 ரூபாய், அப்பம் 10 ரூபாய். இடியப்பம் 10 ரூபாய், 10 இடியப்பங்கள் தேங்காய் சம்பலுடன் 40 ரூபாய், லெவரியா 20 ரூபாய், பேன் கேக் 15 ரூபாய் போன்ற விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக காமினி குமார தெரிவித்துள்ளார்.