ரஷ்யா தங்கள் நாட்டில் இன்ஸ்டாகிராம் சேவையை முடக்குவதாக அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் இன்ஸ்டாகிராம் சேவை முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிறநாட்டு தலைவர்களுக்கு எதிராக வெறுப்பு பதிவுகளை வெளியிட அனுமதிப்பதாக ‘பேஸ்புக்’ மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ நிறுவனங்கள் நேற்று முன்தினம் அறிவித்தன.
இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா தங்கள் நாட்டில் இன்ஸ்டாகிராம் சேவையை முடக்குவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து இன்ஸ்டாகிராம் செயலியின் முக்கிய நிர்வாகியான ஆடம் மோசரி, “ரஷியாவில் 8 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வரும் நிலையில், இந்த முடக்கம் தவறானது” என தெரிவித்துள்ளார்.