சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த குழாயில் அடைக்கும் கொழுப்பை கரைத்து இதய நோய் வராமல் தடுக்கும்.
இதனை வைத்து சுவையான சட்னி தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
சின்ன வெங்காயம், பூண்டை தோல் உரித்து வைக்கவும். மிக்சியில் சின்ன வெங்காயம், பூண்டு, புளி, வர மிளகாய், தேவையான உப்பு ஆகியவை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சட்னி பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவை சேர்த்து தாளித்த பின் அதில் அரைத்த சட்னி கலவையை கொட்டி பச்சை வாசனை போகும் வரை கிளறி இறக்க வேண்டும்.
இப்போது சின்ன வெங்காயச் சட்னி ரெடி.