எதிர்வரும் 5 வருடங்களில் புவியின் வெப்பநிலை 1.5 பாகை செல்சியஸ்ஸினால் அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் 50 சதவீதம் அளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, 2022 முதல் 2026 வரையான காலப்பகுதியில், உலக நாடுகளில் அதிகளவான வெப்பநிலை பதிவாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 தசாப்தங்களாக புவி வெப்பமடைதலானது கிரமமாக அதிகரித்து வருகிறது.
மேலும் இதற்கு மனித செயற்பாடுகளே காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.