Wednesday, Jun 07, 2023, 20:06:11

டான் திரைவிமர்சனம்

நிருபரின் பெயர் : YarlSri
  • புதுப்பிப்பு நேரம் : May 13, 2022 Friday
  • 130 views

லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ள திரைப்படம் டான். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். டாக்டர் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படத்தின் மீது, அதைவிட அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பையும் டான் பூர்த்தி செய்தாரா? இல்லையா? வாங்க பார்க்கலாம்..



கதைக்களம்



சிறு வயதில் இருந்தே சரியாக படிக்காமல் இருக்கும் சிவகார்த்திகேயன் { சக்ரவத்தி }, எப்போதும், அனைத்து விஷயத்தையும் விளையாட்டு தனமாகவே பார்க்கிறார். சூழ்நிலைக்கு ஏற்றார் போல் தனது வருங்கால கனவை மாற்றிக்கொண்டே இருக்கும் சிவகார்த்திகேயன், படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று கண்டிப்பில் பேசும் தந்தை சமுத்திரக்கனியின் மீது வருத்தம் கொள்கிறார்.  



படிப்பும், தந்தையின் கண்டிப்பும் ஒரு புறம் இருக்க, மறுபுறம் கதாநாயகி பிரியங்கா மோகனை {அங்கயற்கண்ணி} பள்ளியில் சந்திக்கும் சிவகார்த்திகேயன், அவர் மீது காதலில் விழுகிறார். பள்ளி படிப்பை முடித்து கல்லூரி செல்லும் சிவா, அங்கு தான் எதிர்பாராத பல விஷயங்களை எஸ்.ஜே. சூர்யாவால் { பூமிநாதன் } சந்திக்கிறார்.



டான் திரைவிமர்சனம்



 



கல்லூரியில் தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி டானாக மாறும் சிவகார்த்திகேயன் மீது கோபம் கொள்ளும் எஸ்.ஜே. சூர்யா, சிவகார்த்திகேயனை கல்லூரியில் இருந்து விரட்ட பல விஷயங்களை மேற்கொள்கிறார். இப்படி ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி மோதிக்கொள்கிறார்கள்.



இப்படி சிவகார்த்திகேயனின் வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கும் நேரத்தில், தான் என்னவாக போகிறோம் என்று தெரியாமல் சுற்றிக்கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு, முதல் முறையாக தனக்குள் இருக்கும் திறமை தெரியவருகிறது. தனக்குள்ள இருந்த திறமையை கண்டுபிடித்த சிவா, அந்த திறமையை வைத்து தனது வாழ்க்கையில் ஜெயித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..  



படத்தை பற்றிய அலசல்



பள்ளி பருவத்திலும், கல்லூரி பருவத்திலும் நம்மை கொஞ்சம் கூட ஏமாற்றவில்லை நடிகர் சிவகார்த்திகேயன். ஆம், கிளாஸான நடிப்பு, அருமையான காமெடி டெலிவரி, காதல், நடனம், செண்டிமெண்ட், எமோஷன் என அனைத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.



பூமிநாதனாக வரும் எஸ்.ஜே. சூர்யா வழக்கம் போல் வைலெண்ட்டாக இல்லாமல், இப்படத்தில் சைலேட்டானாக வந்து மிரட்டலாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் தந்தையாக வரும் சமுத்திரக்கனி நம்மை கண்கலங்க வைத்துவிட்டார். நம் வாழ்க்கையில் மறக்கமுடியாத கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்றாகும். ராதா ரவி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.



 



டான் திரைவிமர்சனம்



நடிகை பிரியங்கா மோகன் அழகிய நடிப்பினால் இளைஞர்கள் மனதை கொள்ளைகொண்டுள்ளார். காதல் மட்டுமல்லாமல், எமோஷன் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். காமெடிக்காக மட்டுமல்லாமல், சிவகார்த்திகேயனுக்கு உறுதுணையாக வந்து நிற்கிறது சூரியின் கதாபாத்திரம்.



பாலசரவணன், விஜய் இருவருக்கும் தனி பாராட்டு. சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடித்த நடிகை ஆதிரா பாண்டிலட்சுமி தனித்து நிற்கிறார். மற்றபடி ஷிவாங்கி, முனீஸ்காந்த், காலி வெங்கட், ராஜு, ஷாரிக், மனோபாலா ஆகியோர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கரெட்டாக செய்துள்ளனர்.





அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார் என்று தான் சொல்லவேண்டும். அழகான நகைச்சுவை, கியூட்டான காதல் காட்சிகள், கண்கலங்க வைக்கும் செண்டிமெண்ட் என அசத்திவிட்டார் சக்ரவத்தி. வசனங்கள் படத்தை தூக்கி பிடித்துநிற்கிறது. அதற்கு தனி அப்லாஸ். துவக்கத்தில் திரைக்கதையில் தொய்வு இருந்தாலும், பின் படத்தை ரசித்து பார்க்க வைத்துவிட்டார். பல இடங்களில் ஒர்கவுட் ஆன காமெடி ட்ராக் சில இடங்களில் சொதப்பிவிட்டது.





வழக்கம் போல் இசையில் மிரட்டிவிட்டார் அனிருத். குறிப்பாக செண்டிமெண்ட் காட்சிகளில் வரும் பின்னணி இசை சூப்பர். பாடல்கள் அருமை. நடன இயக்குனர்களுக்கு க்ளாப்ஸ். கே.எம். பாஸ்கரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. எடிட்டிங்கில் தனித்து நிற்கிறார் நாகூரன் ராமசந்திரன்.



க்ளாப்ஸ்



சிபி சக்ரவத்தி இயக்கம், வசனம்



அப்பா, மகன் பாசம்



சமுத்திரக்கனி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா நடிப்பு



நகைச்சுவை காட்சிகள்



பல்ப்ஸ்



திரைக்கதையின் துவக்கத்தில் ஏற்பட்ட தொய்வு



சில இடங்களில் ஒர்கவுட் ஆகாத காமெடி



மொத்தத்தில், டான் அறிமுக இயக்குனரின் மாபெரும் வெற்றி..



3/5  


செய்திகளைப் பகிரவும்

இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2023 Yarlsri India news
Website by Yarlsri news