Wednesday, May 18, 2022, 04:40:04

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்‘.

நிருபரின் பெயர் : Yarlsri news
  • புதுப்பிப்பு நேரம் : Apr 26, 2020 Sunday
  • 355 views

வியாகம்18 மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீது வர்மா, கௌதம் வாசுதேவ் மேனன், ரக்‌ஷன், நிரஞ்சன அகத்தியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்‘.சித்தார்த்(துல்கர் சல்மான்) , காலிஸ்(ரக்‌ஷன்) இருவரும் இளைஞர்களுக்கே உரிய அலப்பரை, அல்டாப்பு, ஜாலி, பந்தாவான கார், என சுற்றித் திரிகிறார்கள். இடையில் பிரதாப்புக்கு மீரா (ரீது வர்மா) மீது ஒருதலைக் காதல். காதல் சுலபமாகவே கைகூட டூயட், நால்வர் நட்பு என வழக்கமான காதல் படமாக செல்லும் கதையில் திடீரென காசெல்லாம் கரைஞ்சிடுச்சு புராஜெக்ட் பண்ணி ரொம்ப நாளாச்சே என சுறுசுறுப்பாக வேலையைத் துவங்குகிறார்கள் சித்தார்த் மற்றும் காலிஸ். அன்லைனில் லேப்டாப் ஷாப்பிங், ஒரிஜினல் பாகாங்களை எடுத்துவிட்டு டூப் மதர் போர்டு, ஐசி என மாற்றி புராடெக்ட் பிடிக்கவில்லை என ரிடர்ன் கொடுக்கிறார்கள். ஒரிஜினல் பாகங்களை நல்ல லாபத்திற்கு விற்கிறார்கள். இதனால் பாதிக்கப்படும் பிரதாப் சக்கரவர்த்தி (கௌதம் வாசுதேவ் மேனன்) சித்தார்த் &கோ வை வலை வீசித் தேடுகிறார். தொடர்ந்து அடுத்து கார்களில் திருட்டு போலீஸ் வலை என செல்லும் காட்சியில் சற்றும் எதிர்பாரா திருப்பங்களாக இடைவேளை , அதற்கு பின்னணி, திரில் என இதற்கு முடிவு என்ன என்பது கலர்ஃபுல் கிளைமாக்ஸ்.துல்கர் சல்மான் அவருக்கு நிகர் அவரே. ஒவ்வொரு காட்சியிலும் துறுதுறுவென கண்கள் படபடக்க பேசுவதும், சிரிப்பதும், காதலிப்பதும் என சப்ஸ்டிடியூட்டே அவருக்குப் போட முடியாது. ரீது வர்மா பாந்தமான லுக், மாடர்ன், அப்பாவி முகம், அழகிய கண்கள் சகிதமாக படத்திற்கு அவரும் அவரது நடிப்பும் தவிர்க்க முடியாத ஒன்று.ஹீரோவுடன் வரும் ஸ்மார்ட் நண்பர் பாத்திரம் சந்தானத்திற்கு பின் இன்னமும் நிரப்பப்படாமலேயே இருக்க , ரக்‌ஷன் அந்தப் பாத்திரத்தில் பச்சக் என பொருந்தியிருக்கிறார். நிரஞ்சனா அகத்தியன், அகத்தியனின் மகள். டஸ்கி டார்லிங்காக ராயல் என்ஃபீல்ட் ஓட்டி வருவதும் கிரங்கடிப்பதுமாக இவ்வளவு நாளாக எங்கே இருந்தீங்க என்றே எனக் கேட்கத் தோன்றுகிறது.படத்திற்கு மற்றுமொரு ஸ்டைலிஷ் எலிமென்ட் கௌதம் மேனன். அவர் அறிமுகமானது முதல் கிளைமாக்ஸ் வரை , நடை உடை பாவனை, தோரணை என மனிதர் துல்கருக்கே டஃப் கொடுக்கிறார்.இந்தப்படம் எப்படியிருக்கும் என கொஞ்சமும் நினைக்காமல் குறிப்பாக முந்தைய மலையாள வரவு ஹீரோக்களின் தமிழ் மேக்கிங் படங்களால் அடிபட்டவர்களாக போய் அமர்ந்தால் நிச்சயம் இந்தப்படம் ஆச்சர்யம் ஏற்படுத்தும். அதிலும் முதலில் வரும் அந்த இருபது நிமிடக் காதல் காட்சிகள் உங்கள் பொருமையைக் கூட சோதிக்கலாம். ஆனால் அதன் பின் ஒவ்வொரு காட்சியும் இளமைத் துள்ளலும், எதிர்பாரா திருப்பங்களுமாக சீட்டில் கட்டிப்போடும். படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி முதலில் கேமராமேன் என்பது அவரது காட்சியமைப்பிலும் விஷுவலிலும் தெளிவாகவே தெரிகிறது.கோவா, டெல்லி, சென்னை, பார்ட்டி , ஹோட்டல் என படம் எங்கெங்கோ பயணிக்க அதற்கேற்ப கே.எம் பாஸ்கரனின் ஒளிப்பதிவு அற்புத அலப்பரைக் காட்டுகிறது. ஹர்ஷவர்தன், ராமேஷ்வர் பின்னணி இசை இளமைத் ததும்பல். மசாலா காஃபே பேண்ட் உருவாக்கத்தில் பாடல்கள்தான் இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் வெளியாவதற்கு முன்பே அதீத எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கும். ஒரு சில டெக்னிக்கல் லாஜிக்குகள் இடிக்கலாம், குறிப்பாக அவ்வளவு பெரிய டிரக் டீலர் ஏன் தனியாகவே இருக்கிறார் , தன்னை ஒரு குழு பின் தொடர்வது கூடவா தெரியாது.மொத்தத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் ஹாலிவுட் தர மேக்கிங் ரகமாக உங்களை நிச்சயம் கொள்ளையடிக்கும் இந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்‘. 


செய்திகளைப் பகிரவும்

இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2022 Yarlsri India news
Website by Yarlsri news