Thursday, Jun 17, 2021, 03:59:54

தக்காளி புலாவ் செய்வது எப்பிடி

நிருபரின் பெயர் : Yarlsri news
  • புதுப்பிப்பு நேரம் : Apr 25, 2020 Saturday
  • 274 views

தேவையான பொருட்கள்



வரகரிசி-1 கப்              

பெங்களூர் தக்காளி (கனிந்தது)  -  3     

உப்பு -தேவையான அளவு   

வரமிளகாய்  -  2    

சின்ன வெங்காயம்  - 50 கிராம்  

சோம்பு -  1/2 டீஸ்பூன்

பூண்டு -  2 பல்

இஞ்சி  -   1 இன்ச் அளவு   

பொடியாக நறுக்கிய புதினா - சிறிதளவு

ஃப்ரெஷ் பட்டாணி  - 100 கிராம்  

எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி     

பட்டை -1 இன்ச் அளவு   

கிராம் - 2    

ஏலக்காய்  -  2    

பொடியாக நறுக்கிய மல்லித்தழை -      சிறிதளவு.



 



செய்முறை



சுமார் 30 நிமிடங்கள் வரகரிசியைத் தண்ணீரில் ஊற வைக்கவும். மிக்ஸியில் தோல் நீக்கி நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, பூண்டு, இஞ்சி, வரமிளகாய் சேர்த்து மைய அரைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காயைச் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். வதக்கிய கலவை கெட்டியானதும், சுவைக்குத் தேவையான உப்பைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். அதனுடன் பச்சை பட்டாணி, வடித்த அரிசியைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். அதனுள் பொடியாக நறுக்கிய மல்லித்தழை, புதினாவைச் சேர்க்கவும். சுமார் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து, கலவையைக் குக்கருக்கு மாற்றவும். சுமார் 2 விசில் விட்டு அரிசியை வேக வைத்து இறக்கவும். சுவையான வரகரிசி தக்காளி புலாவ் தயார்.


செய்திகளைப் பகிரவும்

இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2021 Yarlsri India news
Website by Yarlsri news