வீட்டிலிருந்தபடியே நினைத்து வணங்க வேண்டிய கோயிலில் ஒன்றாக இந்த முருகனின் கோயில் திகழ்கிறது. இக்கோயிலை குறித்த மகிமைகளை நாம் அறிந்துகொண்டு ஊரடங்கு நிறைவடைந்ததும் சென்று தரிசிக்கலாம். எல்லாம் வல்ல பரம்பொருளாகிய முருகப்பெருமான் பக்தர்களின் நலனுக்காக அவ்வப்போது, ஆங்காங்கே அநேக விதமான அருளாடல்களைப்புரிந்து அருள்பாலித்து வரும் தொன்மை வாய்ந்த திருத்தலங்கள் பல. அவற்றுள் தொண்டைத் திருநாட்டில்