Thursday, Jun 17, 2021, 05:33:44

உடல் எடையை குறைக்கும் கொள்ளு கஞ்சி

நிருபரின் பெயர் : YarlSri
  • புதுப்பிப்பு நேரம் : Jun 10, 2020 Wednesday
  • 151 views

கொள்ளுவை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் கஞ்சி தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: கொள்ளு, புழுங்கல் அரிசி, உப்பு, இஞ்சி, பூண்டு, மிளகுப்பொடி. கொள்ளுவை லேசாக வறுத்து பொடி செய்ய வேண்டும். புழுங்கல் அரிசியை உடைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு ஸ்பூன் புழுங்கல் அரிசி சம அளவு கொள்ளுப்பொடி எடுக்கவும்.இதனுடன் உப்பு சேர்த்து இஞ்சி, பூண்டு தட்டிபோடவும். நீர்விட்டு கஞ்சிப் பதத்தில் கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறிது மிளகுப்பொடி சேர்த்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும். கொழுப்பு சத்தை கரைக்கும் தன்மை கொள்ளுக்கு உண்டு. ஊட்டச்சத்து மிக்கது. கொள்ளு, கொடம்புளி ஆகியவை தலா 15 கிராம் எடுத்து கொதிக்க வைத்து தேனீராக்கி குடிப்பதன் மூலம் உடல் எடை குறையும்.கொள்ளுபொடி, சீரகப் பொடி, சுக்குப் பொடி, நன்னாரி பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்து கலந்து ஒரு ஸ்பூன் சாப்பிடலாம் அல்லது வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.இதனால் உடல் எடை குறையும்


செய்திகளைப் பகிரவும்

இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2021 Yarlsri India news
Website by Yarlsri news