Saturday, Oct 23, 2021, 07:27:29

அசுஸ் நிறுவனம் இந்தியாவில் ரோக் போன் 3 மாடலின் 12 ஜிபி ரேம் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது!

நிருபரின் பெயர் : YarlSri
  • புதுப்பிப்பு நேரம் : Oct 08, 2020 Thursday
  • 140 views

அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 3 புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை மாதத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பின் கடந்த மாதம் இதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.



அந்த வரிசையில் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது துவங்குகிறது. 



புதிய ஸ்மார்ட்போனை வாங்குவோர் வட்டியில்லா மாத தவணை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்துவோருக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. 



 



இந்தியாவில் புதிய ரோக் போன் 3 (12 ஜிபி + 128 ஜிபி) மாடல் விலை ரூ. 52,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


செய்திகளைப் பகிரவும்

இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2021 Yarlsri India news
Website by Yarlsri news