Thursday, Jun 17, 2021, 05:04:56

சியோமியின் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி வேரியண்ட் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்!

நிருபரின் பெயர் : YarlSri
  • புதுப்பிப்பு நேரம் : Nov 23, 2020 Monday
  • 86 views

சியோமி நிறுவனம் தனது ரெட்மி 9 5ஜி மற்றும் நோட் 9 ப்ரோ 5ஜி வேரியண்ட் நவம்பர் 26 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிது. இதைத் தொடர்ந்து, ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி வேரியண்ட் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.



கீக்பென்ச் விவரங்களின் படி ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், அட்ரினோ 619 ஜிபியு, 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் கோரில் 645 புள்ளிகளையும், மல்டி கோரில் 1963 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.



இதுதவிர ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மாடல் 6.67 இன்ச் பன்ச் ஹோல் எல்சிடி பேனல் டிஸ்ப்ளே, 108 எம்பி பிரைமரி கேமரா, 4820 எம்ஏஹெச் பேட்டரி, 33வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. 



முன்னதாக வெளியான தகவல்களில் ரெட்மி நோட் 9 5ஜி மாடலில் 6.53 இன்ச் FHD+ பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 800யு அல்லது டிமென்சிட்டி 720 பிராசஸர், 48 எம்பி பிரைமரி கேமரா சேர்த்து மூன்று கேமரா லென்ஸ், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.


செய்திகளைப் பகிரவும்

இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2021 Yarlsri India news
Website by Yarlsri news