ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் உயிரிழந்தார். திருச்சி, துறையூர் அருகே, அய்யாறு, குண்டாறு பகுதிகளில் நீண்ட காலமாக மணல் கடத்தல் நடந்து வருகிறது.
தற்போது, ஊரடங்கு அமலில் உள்ளதை பயன்படுத்தி, கண்ணனுாரைச் சேர்ந்த பிரபு, 38, என்பவர், சிங்காரவேலன், 27, சுரேந்தர், 30, ஆகியோருடன், வடக்குவெளி கிராமத்தில், குண்டாறு அருகே, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு மணல் அள்ளிக் கொண்டு இருந்தார்.
அப்போது, மேலிருந்த மணல் திட்டு சரிந்து விழுந்து, சிங்காரவேலன் மண்ணுக்கடியில் சிக்கி, பரிதாபமாக இறந்தார். சுரேந்தர் பலத்த காயமடைந்தார். ஜெம்புநாதபுரம் போலீசார், பிரபுவை கைது செய்தனர்.