Wednesday, Mar 29, 2023, 12:14:21

ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி

நிருபரின் பெயர் : Yarlsri news
  • புதுப்பிப்பு நேரம் : Jul 18, 2020 Saturday
  • 733 views

வாஷிங்டன்: கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 4,591 பேர் பலியாகி உள்ளனர்.இதற்கு முன் அமெரிக்காவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 2,569 பேர் உயிரிழந்தனர். தினமும் அதிகரிக்கும் உயரிழப்பால் அமெரிக்க மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.



இந்நிலையில் கொரோனாவுக்கு புதிதாக 29,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை அங்கு 7 லட்சத்தை தாண்டியுள்ளது.



இதுவரை அமெரிக்காவில் மொத்தம் 37,000க்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்நியூயார்க் நகரில் மட்டும் கடந்த வாரத்தில் 3,778 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.



அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 22, 179 பேரும், ஸ்பெயினில் 19,130 பேரும், பிரான்ஸில் 17,920 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.


செய்திகளைப் பகிரவும்

இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2023 Yarlsri India news
Website by Yarlsri news