ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்திலிருந்து 421 இலங்கையர்கள்
இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து எமிரேடஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.-648 என்ற விமானத்தின் மூலமாக 17 இலங்கையர்கள் அதிகாலை 1.30 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அதேநேரம் கட்டாரிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான QR-668 என்ற விமானத்தில் 394 இலங்கையர்கள் அதிகாலை 1.50 மணிக்கு பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்களில் சுமார் 210 பேர் பல்வேறு விமான சேவைகளில் பணியாற்றும் விமானக் குழு உறுப்பினர்கள் ஆவார்கள்.
மேலும் லண்டன், ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கை ஏயர்லைன்ஸ் விமானம் சேவையின் யு.எல் -504 மூலமாக 10 இலங்கையர்களும் பண்டாரநாயக்க விமான நிலையத்தை அதிகாலை 5.10 மணியளவில் வந்தடைந்துள்ளனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளையும் பி.சி.ஆர்.சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது.