Sunday, Sep 19, 2021, 23:21:20

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடலை அடக்கம் செய்வதற்கான முன்னேற்பாடுகளை தஞ்சை மாவட்ட ஆட்சியர்!

நிருபரின் பெயர் : YarlSri
  • புதுப்பிப்பு நேரம் : Nov 01, 2020 Sunday
  • 87 views

மறைந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடலை அடக்கம் செய்வதற்கான முன்னேற்பாடுகளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆய்வுமேற்கொண்டார். மறைந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல், அவரது சொந்த ஊரான பாபநாசம் அடுத்த ராஜகிரியில்



அடக்கம் செய்யப்பட உள்ளது. இதனையொட்டி, ஆம்புலன்ஸ் மூலம் பிற்பகல் 1 மணிக்கு கொண்டுவரப்பட்ட அமைச்சரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அங்குள்ள ஐயனார் கோயில் திடலில் வைக்கப்பட்டது. அப்போது, துரைக்கண்ணுவின் உடலுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுக இணை



ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து ஏராளமான பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னதாக,



அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, ஆய்வுமேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது அதிமுக எம்பி வைத்திலிங்கம், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.


செய்திகளைப் பகிரவும்

இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2021 Yarlsri India news
Website by Yarlsri news