Wednesday, Mar 29, 2023, 13:14:41

மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய எதுவேண்டுமானாலும் செய்வோம்: ஐ.நா.

நிருபரின் பெயர் : YarlSri
  • புதுப்பிப்பு நேரம் : Feb 04, 2021 Thursday
  • 157 views

மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வோம் என ஐ.நா சபையின் பொதுச் செயலர் அன்டொனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘மியன்மாரில் அரசியலமைப்புச் சட்டம் மீண்டும் நிறுவப்பட வேண்டும். சர்வதேச சமூகத்தில் இருக்கும் முக்கிய நாடுகள் மூலம் மியன்மார் மீது கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும்.



மியன்மார் மக்களின் மனதையும், தேர்தல் முடிவுகளையும் மறுப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாட்டை இப்படி நடத்தக் கூடாது. இப்படி முன்னெடுத்துச் செல்லக் கூடாது என்பதை மியன்மார் இராணுவத்துக்கு புரிய வைக்க முடியும் என நம்புகிறேன்’ என கூறினார்.



ஐ.நா பாதுகாப்புச் சபையில் விட்டோ பலம் கொண்ட ஓரு நிரந்தர உறுப்பினரான சீனா, மியன்மார் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பைக் கண்டிக்க மறுப்பதால், ஐ.நா பாதுகாப்புச் சபையில் ஒரு பொது நிலைப்பாட்டை எடுக்க முடியாதுள்ளது.



கடந்த பல ஆண்டுகளாக மியன்மாரை, சீனா சர்வதேச விசாரணையிலிருந்து பாதுகாத்துக் கொண்டிருப்பதும் இங்கு நினைவுகூறத்தக்கது. ரொஹிஞ்சா முஸ்லிம்கள் பிரச்னையின் போது கூட, சீனா ரஷ்யாவோடு இணைந்து மியன்மாரை சர்வதேச விமர்சனங்களிலிருந்து பாதுகாத்தது.


செய்திகளைப் பகிரவும்

இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2023 Yarlsri India news
Website by Yarlsri news